மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மயிலாடுதுறையில் மாணவர்கள், மின்சார ஊழியர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது :-
ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் மின் சிக்கன வார விழா கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா கடந்த 14ஆம் தேதி துவங்கி இன்று வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி இன்று மயிலாடுதுறையில் நடைபெற்றது. மின்வாரிய அலுவலகத்தில் இருந்து துவங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. பேரணியை மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளர் ரேணுகா கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் மாணவர்கள் மற்றும் மின்சார ஊழியர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். ஐ எஸ் ஐ முத்திரை கொண்ட மின்சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எல்இடி விளக்குகளை பயன்படுத்த வேண்டும் மின்சார சாதனங்களை பராமரிப்பது இவை குறித்து விழிப்புணர்வு வாசகங்களை கூறியபடி பேரணியில் பங்கேற்றவர்கள் சென்றனர். மின்வாரிய அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

















