மயிலாடுதுறையில் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேருந்து மற்றும் வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது :-
தமிழக முழுவதும் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை காமராஜர் பழைய பேருந்து நிலையத்தில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியரும் , தேர்தல் நடத்தும் அலுவலருமான ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் தொடர்பான துண்டறிக்கையினை வழங்கினார். மேலும் பொதுமக்கள் 100% வாக்களிப்பை உறுதி செய்ய வேண்டும் என அப்போது அவர் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வில் மகளிர் திட்ட அலுவலர் சீனிவாசன் மற்றும் வட்டார போக்குவரத்து ஆய்வாள ராம்குமார் உட்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
