பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவி குழு பெண்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி மயிலாடுதுறையில் நடைபெற்றது :-
பாலின சமத்துவம், குழந்தை திருமணம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை இவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவி குழு பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி மயிலாடுதுறையில் நடைபெற்றது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி கொடி அசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக தர்மபுரம் ஆதீன கலைக்கல்லூரி வரை பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெண்கள் கையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை தாங்கியவாறு சென்றனர். முன்னதாக பெண் குழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

















