ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. படத்தில் இடம்பெற்று இருந்த பண்டோரா கற்பனை உலகம் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. வசூலிலும் சாதனை நிகழ்த்தி 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது.
13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் ‘அவதார் தி வே ஆப் வாட்டர்’ என்ற திரைப்படம் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி வெளியாகி வசூலில் சாதனை படைத்தது
இந்நிலையில், அவதார் படத்தின் 3வது பாகம் ‘ Avatar: Fire and Ash’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
வரும் 25ம் தேதி வெளியாகும் ‘The Fantastic Four: First Steps’ படத்துடன் திரையரங்குகளில் ‘அவதார்’ படத்தின் டிரெய்லர் திரையிடப்படும் என அவதார் படக்குழு அறிவித்துள்ளது.
அவதார் படத்தின் 3 ஆம் பாகம் இந்தாண்டு டிசம்பர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது