மயிலாடுதுறையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், ஆட்டோக்காரர்கள் சிலர் புகுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சியின் விவசாய பிரிவு துணைச் செயலாளர் பண்ணை வயல் இளங்கோ தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பாஜக மாவட்ட துணை செயலாளர் பிரேமா பேசும் பொழுது, தமிழகத்தில் ஆட்டோவில் செல்வதற்கு கூட அச்சமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக பேசினார். அவர் பேசிக் கொண்டிருக்கும்போது அங்கு உள்ளே புகுந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர், ஆட்டோ ஓட்டுநர்களை எவ்வாறு தவறாக பேசலாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கைகலப்பு உருவாகும் சூழல் எழுந்த நிலையில் காவல்துறையினர் இது தரப்பையும் சமாதானம் செய்த அனுப்பி வைத்தனர். திமுகவைச் சேர்ந்தவர்கள் தூண்டுதலால், இந்த பிரச்சனை எழுந்துள்ளதாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். சாலையில் நடைபெற்ற மோதல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
