சீர்காழி வைத்தீஸ்வரன்கோவில் ,பங்குனி உத்திர விழாவில் பஞ்ச மூர்த்திகளும் சகோபுர காட்சி

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் ,பங்குனி உத்திர விழாவில் பஞ்ச மூர்த்திகளும் சகோபுர காட்சி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு:-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் அருள்மிகு தையல்நாயகி உடனாகிய வைத்தியநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. நவகிரக ஸ்தலங்களில் முதன்மையான செவ்வாய் ஸ்தலமாக விளங்கும் இக்கோவில் முருகப்பெருமான் செல்வமுத்துக்குமாரசாமியாக தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 23ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 5 ஆம் நாள் திருவிழாவான சகோபுர காட்சி விழா நடைபெற்றது. விநாயகர்,செல்வ முத்துக்குமார சுவாமி, தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி, சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் சகோபுரத்தில் எழுந்தருள மகாதீபாரதணைக்கு பின் புறப்பட்டு வீதியுலா நடைபெற்றது.

Exit mobile version