மங்கைமடத்தில்ADMKகட்சியை சேர்ந்த 2000க்கும் மேற்பட்டோர் TVKசெயலாளர் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்

சீர்காழி அருகே மங்கைமடத்தில் அதிமுக கட்சியை சேர்ந்த 2000க்கும் மேற்பட்டோர் தவெக மாவட்ட செயலாளர் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். மாவட்ட செயலாளர் இருக்கு கிரேன் மூலம் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்துள்ள நிலையில் திமுக, அதிமுக மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகின்றனர். அதே போல மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த மங்கைமடத்தில் 2000க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது. அதிமுக மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தலைவர்
நாடி.மாமல்லன் தலைமையில் மாவட்ட அம்மா பேரவை து செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஒன்றிய தகவல் தொழிநுட்ப பிரிவு செயலாளர். சதீஷ்குமார் நாங்கூர்,மங்கைமடம்,நெப்பத்தூர் ஊராட்சி
சேர்ந்த 2000க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியிலிருந்து மாவட்ட செயலாளர் கோபிநாத் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர் அவர்களுக்கு தமிழக வெற்றிக்கழக சால்வை அணிவித்து கட்சியில் மாவட்ட செயலாளர் இணைத்து கொண்டார். முன்னதாக மாவட்ட செயலாளருக்கு செண்டை மேளம் முழங்க பட்டாசு வெடித்து கிரேன் மூலம் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் தவெக ஒன்றிய செயலாளர்கள் மற்றும் மாவட்ட ,மாநில பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version