திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ‘மரங்களின் மாநாடு’ நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டார்.
அப்போது அவர்,
“காட்டுக்குள் புலிகள் நுழைந்ததும் ஒரு அணில்கூட கண்ணில் படவில்லை. அதுபோல் நாட்டுக்காக நிற்பவர்களால் தான் இம்மாநாட்டை நடத்த முடியும்; அற்ப ஓட்டுக்காக நிற்போர்களால் மாநாடு நடத்த முடியாது” என்று விமர்சித்தார்.
ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்தவுள்ள திட்டங்கள் :
தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்தவுள்ள சில திட்டங்களையும் சீமான் அறிவித்தார்: எந்த வீட்டில் பெண் குழந்தை பிறந்தாலும், ₹5,000 வைப்புத் தொகை வங்கியில் செலுத்தப்படும். அந்த பெண் திருமண வயதை அடையும்போது அந்தத் தொகை ₹10 லட்சமாக வழங்கப்படும்.
மரம் நடும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் 10 மதிப்பெண்கள் கூடுதல் வழங்கப்படும். 100 மரங்களை நட்டு வளர்த்த மாணவர்களுக்கு “சிறந்த தமிழ் தேசிய குடிமகன்” சான்றிதழ் வழங்கப்படும். வேலைவாய்ப்புகளில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆயிரம் மரங்களை வளர்ப்பவர்களுக்கு அரசு மரியாதை வழங்கப்படும். சொந்த வீட்டில் உள்ள மரமாக இருந்தாலும் வெட்ட அனுமதி கிடையாது என்பதற்காக புதிய சட்டம் கொண்டு வரப்படும்.
“மரங்களுக்கு உயிரே இல்லை என்று சொல்பவர்கள் தவறு. அன்பாகப் பேசியால் மரங்கள் பூக்கும், காய்க்கும்,” என்று சீமான் கூறினார்.
நடிகர்களை குறித்த விமர்சனம்
அதே நேரத்தில், நடிகர்களின் அரசியல் ஆசையை குறித்தும் அவர் கடுமையாக பேசியார்.
“நடிகர் நாட்டை ஆளத் துடிக்கிறார்கள், நீங்கள் பின்னால் சென்று நிற்கிறீர்கள். நடிகரை போற்று, கொண்டாடு, ஆனால் அவனை எங்கே வைக்க வேண்டுமோ அங்கே வை,” என்று விஜய்யை சுட்டிக் கூறினார்.
















