December 21, 2025, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

அரியதுறை வரமூர்த்தீஸ்வரர் கோவில்

by Satheesa
October 22, 2025
in Bakthi
A A
0
அரியதுறை வரமூர்த்தீஸ்வரர் கோவில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

சென்னையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கவரப்பேட்டை என்னுமிடத்தில் அருள்மிகு வரமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் மீசை வைத்த சிவன், பார்வதி மற்றும் விநாயகருடன் காட்சியளிக்கிறார்.

விநாயகர், சுப்ரமணியர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சந்நிதிகள் உள்ளன. மண்ணால் செய்யப்பட்ட காலபைரவர் தனிச்சந்நிதியில் காட்சியளிக்கிறார். மரகதவல்லி தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறாள். கருவறையில் சதுர பீடத்தில் வரமூர்த்தீஸ்வரர் காட்சி தருகிறார். சிவன் பார்வதி திருமணக்கோலத்தில் தனியே காட்சியளிக்கிறார்.

இத்தலத்தின் வரலாறு முன்னொரு காலத்தில் ரோம மகரிஷி பிரம்மலோகம் சென்று பிரம்மனிடம் சுவாமி எனக்கு வயதாகிவிட்டதால் சீக்கிரமே சிவ தரிசனம் கிட்ட ஏதுவாக தவம் செய்ய நல்ல இடம் ஒன்றைக் காட்டுங்கள் என்று வேண்டினார்.

இவரின் வேண்டுதலை ஏற்ற பிரம்மா, அருகிலிருந்த தர்ப்பையை எடுத்து அதைப் பந்து போல உருட்டி பூலோகம் நோக்கி வீசியெறிந்தார். அது பிரம்மாரண்ய நதிக்கரையில் விழுந்தது. ஆந்த இடம் தான் தற்போது அரியதுறை என்று அழைக்கப்படுகிறது.

ரோம முனிவர் அங்கே ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து தவம் செய்தார். சிறிது காலத்திலேயே சிவனும் பார்வதியும் முனிவருக்கு காட்சி தந்து வரமளித்தார்கள். ரோம முனிவர் நிர்மாணித்த சிவலிங்கம் தான் இன்று வரமூர்த்தீஸ்வரராக அருள்பாலிக்கிறார்.

கோவிலின் பக்கத்தில் ஆரணி ஆறு வறண்டு போய் முள் காடாக இருந்தாலும், அந்த ஆற்றங்கரையில் சிறிய கிணறு மாதிரி ஒன்று இருக்கிறது. அதில்
யாரும் இறைக்காமலே தண்ணீர் ஊற்றெடுக்கிறது. அதுவும் சுத்தமான நீர். கங்கை நீரை விட புனிதமான நீர்! முன் காலத்தில் தென்னக கோவில்களை தரிசித்து விட்டு காசி நோக்கிச் சென்று கொண்டிருந்தார் முகுந்த முனிவர்.

சதி அனுசூயாவுக்கும் அத்திரி முனிவருக்கும் பிறந்த இவர் அரியதுறைக்கு வந்தார். அவரை வரவேற்ற ரோம மகரிஷியிடம் தான் காசிக்குச் செல்வதாகக் கூறினார்.
அவரோ, இதற்கு ஏன் நீங்கள் அவ்வளவு சிரமப்பட வேண்டும். காசியை விட புண்ணியமானது இந்த ஊர். ஆற்றில் நீராடி வரமூர்த்தீஸ்வரரை வணங்கினால் அவரே நேரடியாகக் காட்சி தருவார் என்று கூறினார்.

அவர் சொல்படியே முகுந்தரும் ஆற்றில் நீராடி இறைவனை வழிபட்டார். ரோமருக்காவது கொஞ்சம் காலம் கழித்து காட்சியளித்த இறைவன் முகுந்த முனிவருக்கு உடனடியாக காட்சியளித்தார். அதுவும் காசியில் அருள்பாலிக்கும் கால பைரவர் உருவத்தில். அவரது தலைச் சடையிலிருந்து நீர் சொட்டி, அது பிரம்மாரண்யத்தில் கலந்தது.

காலபைரவரே அரிய கங்கை நீரை காசியிலிருந்து இங்கு கொண்டு வந்ததால் இந்த ஊருக்கு அரியதுறை என்ற பெயர் ஏற்பட்டது. காலபைரவரின் தலையில் இருந்து கசிந்த கங்கை நீரே இன்றைக்கும் ஆற்றங்கரையிலிருந்து ஊற்றாகச் சுரந்து ஆற்றில் கலக்கிறது. கங்கை நீரை கடவுளே இங்கே கொண்டு வந்ததால் வரமூர்த்தீஸ்வரரை வணங்கினால் பித்ருதோஷம் எனப்படும்.

முன்னோர்கள் செய்த பிழைகள் எல்லாம் மன்னிக்கப்படும். அந்த காலத்தில் மண்ணால் செய்யப்பட்ட காலபைரவர் சிலை இன்றைக்கும் இங்கே காணக் கிடைக்கிறது.
கிருஷ்ண பரமாத்மா பூலோகம் கிளம்பும் போது தேவேந்திரன் கொடுத்த பரிசுகளுள் ஒன்று பாரிஜாத மரம். அம்மரத்தின் சிறப்புகளை பாமா, ருக்மணி இருவரிடம் எடுத்துச் சொல்லி அவர்களிருவரையும் அம்மரத்தை கண்ணனிடமிருந்து கேட்டுப் பெறுமாறு நாரதர் தனித்தனியே அவர்களிடம் பேசி சிண்டு முடிந்தார்.

கிருஷ்ணரோ பாமா, ருக்மணி இருவரையும் ஆளுக்கு ஒரு மாதம் பாரிஜாத மரத்தை வைத்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டார். ஆனால் இதை அறிந்த பாரிஜாத மலர் மிகவும் கோபமுற்று, கிருஷ்ணா என் போன்ற மரத்தின் ஆசை உனக்கு எங்கே புரியும். எனவே நீயும் ஆயிரம் ஆண்டுகள் அரசமரமாக இருந்து பார் என்று சாபமிட்டுவிட்டது.

அதனால் கிருஷ்ண பரமாத்மா ஆயிரம் ஆண்டுகள் இந்த அரியதுறையில் அரசமரமாக இருந்தார். அவரே இன்றைக்கும் மரமாக இருப்பதாக ஐதிகம். இம்மரத்தடியில் ரோம மகரிஷியின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

ஒரு சமயம் முன்னோர் செய்த பாவத்தால் பிறந்த ஒரு குரங்கை வேட்டைக்காரன் ஒருவன் துரத்த, அது பயந்து போய் அரச மரத்தைச் சுற்றி ஓடி, பின்னர் களைப்பில் அங்கிருந்த கங்கை நீரையும் கொஞ்சம் குடித்து, கோவிலுக்குள் ஓடி வரமூர்த்தீஸ்வரர் முன் அடைக்கலம் அடைந்தது. இதனால் அதன் பித்ரு தோஷம் மறைந்தது.

மறு ஜென்மத்தில் அது காஞ்சி மன்னனாகப் பிறந்து, பூர்வ ஜன்ம ஞாபகத்தால் மண் கோவிலாக இருந்த இக்கோவிலை கற்கோவிலாக எழுப்பியதாக ஆலய வரலாறு சொல்கிறது. இந்திரனுக்கும் விருத்ராசுரனுக்கும் நீண்ட நாளாக யுத்தம் நடந்தது. முடிவில் இந்திரன் விருத்ராசுரனைக் கொன்று உடலைத் தூக்கி வீசி எறிந்தான்.

அவ்வுடல் கடும் தவம் புரிந்து கொண்டிருந்த அகத்திய முனிவரின் தலை மீது விழுந்ததால் முனிவரின் தவம் கலைந்தது. இதனால் கோபம் கொண்ட அகத்தியர் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடிக்க சாபமிட்டார். தன் தவறை உணர்ந்த இந்திரன் முனிவரை வணங்கி சாபவிமோசனம் கேட்டான்.

மனமிறங்கிய முனிவர் இந்திரனிடம் அரியதுறை வரமூர்த்தீஸ்வரரை வணங்கினால் சாபம் நீங்கும் என்று கூறினார். அவ்வாறே இந்திரன் பிரதி வருடம் மார்கழி மாதம் அமாவாசை கழிந்த அஷ்டமி திதியில் வரமூர்த்தீஸ்வரரை வணங்கி சாப விமோசனம் பெற்றான்.

திருவொற்றியூரை ஆண்ட சித்திர சேன மகாராஜா ஒரு நாள் வேட்டையாட காட்டுக்குச் சென்றார். அங்கே ஒரு குழந்தையின் அழுகுரலைக் கேட்டு அங்கு சென்று பார்த்தபோது அழகான பெண் குழந்தை ஒன்று இருந்தது. குழந்தை இல்லாத தனக்கு இறைவன் அளித்த வரமாக எண்ணி அக்குழந்தைக்கு மரகதவல்லி எனப்பெயரிட்டு அன்புடன் வளர்த்து வந்தார்.

அக்குழந்தை வளர்ந்து திருமண வயதை அடைந்ததும், சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தார். அப்போது வரமூர்த்தீஸ்வரர் வேடம் கொண்டு மரகதவல்லியை தூக்கி வந்துவிட, ராஜாவும் தன் படையுடன் பின் தொடர்ந்து விரட்டி வந்தார்.

இவ்வூரில் இறைவன் திருமணக்கோலத்தில் அவர்களுக்கு காட்சியளித்தான். ஆதலால் திருமணத்தடை உள்ளவர்கள் இங்குள்ள இறைவனை வணங்கினால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்

கருவறையின் பின்புறம் பாலசுப்பிரமணியரும், கிழக்கே கொடிமரம், பலிபீடம், எளிய வடிவில் நந்திதேவர் ஆகியோரும் காட்சி தருகின்றனர். இதன் வலதுபுறம் சுயம்பு பைரவர் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார்.

இந்த கோவிலில் நவக்கிரஹங்கள் இல்லை. ஆனால் சூரியனும், சந்திரனும் கோவில் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளனர். கோவிலின் மேல் கூரையில் பாம்புகள் செதுக்கப்பட்டுள்ளன. இது இக்கோவிலில் வழிபாடு செய்பவர்கள் சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷத்திலிருந்து நிவர்த்தியாவார்கள் என்பதைக் குறிக்கிறது.

இங்கே வரும் பக்தர்கள் ஊற்றெடுக்கும் கங்கை நீரை அருந்தி, கிருஷ்ண அரச மரத்தை சுற்றி வந்து, பின்னர் வரமூர்த்தீஸ்வரரை உள்ளன்புடன் வணங்கினால், வாழ்வில் வளம் பெறுவர், பித்ரு தோஷம் நீங்கும், திருமணத்தடைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

Tags: aanmigamAriyathurai Varamurtheeswarar Templesiven templetamilnaduTemple History
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

Today Headlines | தலைப்புச் செய்திகள் -22 Octo 2025 | Retro tamil

Next Post

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை தொடரும் – வானிலை மையம் எச்சரிக்கை !

Related Posts

ஆக்கூர் பிரசித்தி பெற்ற தான்தோன்றீஸ்வரர் கோவிலில் 4-ம் ஆண்டு குருபூஜை சிறப்பு அபிஷேகங்கள்
Bakthi

ஆக்கூர் பிரசித்தி பெற்ற தான்தோன்றீஸ்வரர் கோவிலில் 4-ம் ஆண்டு குருபூஜை சிறப்பு அபிஷேகங்கள்

December 21, 2025
தரங்கம்பாடி புகழ்பெற்ற அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா முன்னிட்டு அர்ச்சனை
Bakthi

தரங்கம்பாடி புகழ்பெற்ற அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா முன்னிட்டு அர்ச்சனை

December 21, 2025
Bakthi

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு இசை ஆலாபனை செய்து வழிபாடு தருமபுர ஆதீன கட்டளைத்தம்பிரான் சாமிகள்  பங்கேற்பு

December 20, 2025
நவகிரகதோஷங்கள் நீக்கி தொழில் வளம் அருளும் ஸ்ரீ சிவபக்த ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்புயாகம்
Bakthi

நவகிரகதோஷங்கள் நீக்கி தொழில் வளம் அருளும் ஸ்ரீ சிவபக்த ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்புயாகம்

December 20, 2025
Next Post
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை தொடரும் – வானிலை மையம் எச்சரிக்கை !

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை தொடரும் – வானிலை மையம் எச்சரிக்கை !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
த.வெ.க.விலும் ஆரம்பித்தது மாவட்ட செயலாளர் நீக்கம் – யார் அந்த நபர்?

த.வெ.க.விலும் ஆரம்பித்தது மாவட்ட செயலாளர் நீக்கம் – யார் அந்த நபர்?

December 20, 2025
நாங்கள் கல்வியை கொடுக்கிறோம் RJD துப்பாக்கி கொடுப்பதை பற்றி பேசுகிறது – பிரதமர் மோடி பிரசாரம்

எஸ்ஐஆர் பணிகள் எதற்கு? – மோடியின் அதிரடி பதில்

December 20, 2025
கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்

கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்

December 20, 2025
நெல்லை மாவட்டத்தில் ஸ்டாலினால் தொடங்கப்பட்ட புதிய திட்டப்பணிகள் எவையெவை?

நெல்லை மாவட்டத்தில் ஸ்டாலினால் தொடங்கப்பட்ட புதிய திட்டப்பணிகள் எவையெவை?

December 21, 2025
ஆக்கூர் பிரசித்தி பெற்ற தான்தோன்றீஸ்வரர் கோவிலில் 4-ம் ஆண்டு குருபூஜை சிறப்பு அபிஷேகங்கள்

ஆக்கூர் பிரசித்தி பெற்ற தான்தோன்றீஸ்வரர் கோவிலில் 4-ம் ஆண்டு குருபூஜை சிறப்பு அபிஷேகங்கள்

0
வைத்தீஸ்வரன் கோயிலில்,10-வது ஆண்டாக கிராம மக்கள் 2000பேருக்கு,குளிர்கால கம்பளிபோர்வை மக்கள் பாராட்டு

வைத்தீஸ்வரன் கோயிலில்,10-வது ஆண்டாக கிராம மக்கள் 2000பேருக்கு,குளிர்கால கம்பளிபோர்வை மக்கள் பாராட்டு

0
செங்கல்பட்டு கூடுவாஞ்சேரியில் 4-வது நாளாக செவிலியர்கள் போராட்டம்

செங்கல்பட்டு கூடுவாஞ்சேரியில் 4-வது நாளாக செவிலியர்கள் போராட்டம்

0
கலுங்கடி சாலையில் பள்ளம் குடிநீர்குழாயில் உடைந்து நீர்வீணாகிறது5நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.