சீர்காழி அருகே பூம்புகார் சாயாவனம் பகுதியில் குயிலினும் இன் மொழியால் சமேத சாயாவனேஸ்வரர் கோவில் உள்ளது. பாரம்பரிய மிக்க பூம்புகார் நகரத்தின் சான்றாக இக்கோவில் விளங்குகிறது.
மேலும் இல்லையே எண்ணாத இயற்பகை நாயனார் சிவபெருமானிடம் இங்கு உள்ள சன்னதியில் தான், ஜோதி வடிவில் ஒன்றாக கலந்ததாக புராண வரலாறுகள் கூறுகின்றன.
இக்கோவிலின் அமைந்துள்ள தீர்த்த குளம் ஐராவதம் என்ற யானையால் வெட்டப்பட்டதால் ஐராவத தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. காசியை விட வீசம் அதிகம் என கூறப்படும் இக்கோவிலின் பெருமைகள் சிலப்பதிகார காவியத்தில் குறிப்பிடப்படுகிறது. பூம்புகார் நகரில் 7 கோவில்கள் இருந்ததாகவும், மற்ற கோவில்கள் காலப்போக்கில் இயற்கை பேரிடரால், கடலில் மூழ்கியதாகவும், தற்போது இந்த கோவில் மட்டுமே உள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தொன்மை வாய்ந்த பூம்புகார் நகரம் கடல் கோள்களால் மூழ்கியதாக சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறுகிறார். மேலும் இக்கோவிலில் உள்ள வில்லேந்திய வேலவர் பூம்புகார் கடலிலிருந்து கண்டெடுக்கப்பட்டு இங்கே கொண்டுவந்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி பூம்புகார் கடற்பரப்பில் ஆய்வு .மேலும் பூம்புகார் க்கு சான்றாக விளங்கும் சாயாவனத்தில் கோயிலில் ஆய்வு பணி தொடங்கி நடைபெறுகிறது. பழமையான இக்கோயில் திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கோயில் சுற்று சுவர் முழுவதும் பல்வேறு அறிய தகவல்கள் அடங்கிய தமிழ் எழுத்துக்கள் தான் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் முழுமையையும் தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் சிற்றெழுத்தர்கள் கல்வெட்டுகளில் படிமம் எடுத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

















