நுகர்வு பொருள் வாணிபக் கழகத்தில் தொழிற்சங்க அங்கீகார தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பொறுப்பாளர்கள் நியமனம் இன்று நடைபெற்றது :-
தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் தொழிற்சங்கங்கள் அங்கீகார தேர்தல் பத்தாம் தேதி நடைபெறுகிறது. இதில் நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர்கள் மூலம் தேர்வு செய்யப்படும் தொழிற்சங்கங்கள் மட்டுமே அரசாங்கத்துடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியும். மின்னலையில் அதிமுக தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கம் சார்பில் அங்கீகாரத் தேர்தலை எதிர்கொள்வதற்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யும் நிகழ்ச்சி இன்று மயிலாடுதுறை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் பங்கேற்று பொறுப்பாளர்கள் நியமனம் குறித்தும், தேர்தலில் வாக்கு சேகரிப்பது குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார்

















