திருச்சியில் உள்ள காவலர் குடியிருப்பில் ஒருவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், “திமுக ஆட்சியில் தினமும் கொலை, கொள்ளை, வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன. இப்போது காவலர் குடியிருப்பு பகுதிக்குள்ளேயே ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது, பொதுமக்கள் பாதுகாப்பை பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது,” என குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: “முதல்வர் ஸ்டாலின் தற்போது திருச்சியில் தங்கியிருந்தபோதும், அவருடைய கண்முன்னே இப்படியான சம்பவம் நடப்பது, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டதற்குச் சாட்சியாகும். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என யாருக்கும் பாதுகாப்பில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. போலீசாரை கையாலாகாத நிலையில் வைத்திருப்பது மாநிலத்தின் சாபக்கேடு,” என அண்ணாமலை தெரிவித்தார்.

















