மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருமெய்ஞானத்தில் மிகவும் பழமையான அப்பர், சம்பந்தர், சுந்தரர் என மூவராலும் பாடல்பெற்ற இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பிரம்மபுரீஸ்வரருக்கு பால்,பன்னீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அன்னம்,காய்கறி, பழங்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னாபிஷேக அன்னதானம் வழங்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்

















