விவசாய மண்ணை அழித்து தொழிற்சாலை கொண்டு வரும் வளர்ச்சி வேண்டாம்.நகர் மட்டும் இல்லை கிராமங்களிலும் கஞ்சா, கொகைகன் உள்ளிட்ட போதை பொருட்கள் கிடைக்கிறது.
எங்களுக்கு குவாரி வேண்டாம் தடுப்பணை கட்ட வேண்டும் .
ஆதனூர் குமாரமங்கலம் தடுப்பணை 15 வருடமாக கட்டி இன்றும் முடிக்காத கேவல நிலை. இந்த ஆட்சியை அகற்றுங்கள் என சீர்காழியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கடும் பேச்சு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வியாழக்கிழமை இரவு தமிழக மக்கள் உரிமை மீட்க தலைமுறை காக்க பயணமாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கொட்டும் மழையில் நடைபயணமாக வருகை தந்தார்.
சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் நடைபயணமாக அன்புமணி ராமதாஸ் திரளான தொண்டர்களுடன் அரை கி.மீ தூரம் கொட்டும் மழையில் நடந்து
வந்து பழைய பேருந்து நிலையத்தில் பாமக மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிசாமி தலைமையில் நடந்த பொது கூட்ட மேடையில் கொட்டும் மழையில் பேசத் தொடங்கினார். அப்போது அன்புமணி ராமதாஸ்
பேசுகையில், திமுக அரசை அகற்ற வேண்டும் என்ற நோக்கம் தான் இந்த நடைபயணம்.
எனது தம்பிகள், தங்கைகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை.
நகர் மட்டும் இல்லை கிராமங்களிலும் கஞ்சா, கொகைகன் உள்ளிட்ட போதை பொருட்கள் கிடைக்கிறது.
நிச்சயம் ஆட்சி மாற்றம் எங்களால் நடக்கும்.
நேபாளில் தொடர்ந்து ஊழல் ஆட்சி நடந்தது. அங்க இருந்த மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர்.ஆனால் வன்முறையின்றி ஆட்சி மாற்றம் இங்கு ஏற்படும்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் 2 ஆண்டு முன்பு நடந்தது.
உங்களை போன்ற இளைஞர்களால் ஆட்சி மாற்றம் ஏற்படும்.மீண்டும் திமுக ஆட்சி வந்தால் உங்கள் பிள்ளைகள், பேரபிள்ளைகளை மறந்து விடுங்கள்.
போதை மாத்திரை ஊசி போட்டு இளைஞர்கள் பாதிக்கபடுகின்றனர்.இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் தான் போதை பொருள் அதிகமாக இருந்தது .தற்போது தமிழகத்தில் அதிகமாக உள்ளது.காவல்துறையினர் திறமையானவர்தான். அவர்கள் நினைத்தால் போதை பொருட்கள் விற்பனை கட்டுப்படுத்தலாம். ஆனால் திமுகவினர் தான் விற்க்கின்றனர். 2019, 2021 , 2023 என 3 தேர்தலில் திமுக – விற்கு தொடர்ந்து வெற்றி தந்த மக்களுக்கு ஏமாற்றம், ஏமாற்றம் பட்டை நாமத்தை தான் திமுக தந்தது.
எந்த முன்னேற்றமும் திமுக ஆட்சியில் ஏற்படவில்லை.பெட்ரோ கெமிக்கல் மண்டலம் கொள்ளிடம் ஆற்றில் இரு புறமும் கடலூர் மயிலாடுதுறை மாவட்டத்தில் 45 கிராமத்தில் கொண்டு வந்தனர்.
அப்போது ஊர் ஊராசென்று மக்களுக்கு பிரச்சாரம் செய்து திட்டத்தை நிறுத்தியது பாமக .
விவசாய மண்ணை அழித்து தொழிற்சாலை கொண்டு வரும் வளர்ச்சி வேண்டாம்.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுக்கு சோறு போடும் மண்ணை அழிக்க யாருக்கும் உரிமையில்லை.
இந்த மண்ணை அடுத்த தலைமுறைக்கு நாம் பாதுகாப்பா தரனும்.
கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளை அடிக்க தடுப்பணை கட்ட அரசு மறுக்கிறது.
காவிரி கிளையில் பெரிய ஆறு கொள்ளிடம் . 2022 -ல் 26 மணல் குவாரியில 11 கொள்ளிடதில் திமுக கொண்டு வந்தது. 22 கோடி வருமானம் வந்தது என திமுக அரசு கணக்கு கொடுத்தது. ஆனால் 20 ஆயிரம் கோடி வரனும் இவ்வளவு பெரிய ஊழல். 9500 யூனிட் மணல் எடுத்தாக கூறி ஏமாற்றி அரசு கணக்கு கொடுத்துள்ளது.
ஊழல் செய்த திமுக ஆட்சி இருக்க கூடாது. எங்களுக்கு குவாரி வேண்டாம் தடுப்பணை கட்ட வேண்டும் .
நீர்நிலை மேம்படும்
கடல் நீர் உட்புகுவது தடுக்கப்படும்
தடுப்பணை கட்டுவதை செயல்படுத்த போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.கொள்ளிடம் ஆற்றில் 22 கிமீ கடல் நீர் உட்புகுந்து உள்ளது.கொள்ளிடம் பகுதி விவசாயிகள் குடிக்க தண்ணீர் இல்லாமல் வேதனை படுகின்றார்.
ஆதனூர் குமாரமங்கலம் தடுப்பணை 15 வருடமாக கட்டி இன்றும் முடிக்காத கேவல நிலை. இந்த ஆட்சியை அகற்றுங்கள்.
நெல்
கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு 45 ரூபாய் முதல் லஞ்சம் பணம் கேட்கும் நிலை உள்ளது.
1 குவிண்டால் உற்பத்தி செய்ய ரூ. 2450 செலவு ஆகிறது. அரசு கொடுப்பது 2500.விவசாயிகள் எப்படி விவசாயம் செய்ய முடியும் 1 குவிண்டால் நெல்லுக்கு 275 லஞ்சம் வாங்குகிறார்கள்
விவசாயிடம் லஞ்சம் கேட்டால் எப்படி? என்னிடம் ஆட்சியை தந்தால் 6 நாளில் மாற்றம் தருவேன்.
விவசாயிகள் மீது ஸ்டாலின் அரசுக்கு அக்கறை இல்லை.
தேர்தலில் நேரத்தில் 3 ஆயிரம் கொடுத்து ஓட்டு வாங்க வருவர்கள் .பெண்கள் தாய்மார்கள் 2 விதத்தில் பாதிப்ப அடைகின்றனர்.பேரன் மது போதைக்கு அடிமையாகிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.95 சதம் போதை பொருள் பாதிப்பு சம்பவங்கள் வெளியில் வருவதில்லை .முதல்வர் ஸ்டாலிலுக்கு
பெரியார்,அண்ணா பேரை பயன்படுத்த தகுதி இல்லை.
சமூகநீதி இல்லை.சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தனும் என்றார்.
