திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் மேளதாளம் முழங்க நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வினோதினி துண்டு பிரசுரம் வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்
தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வினோதினி வேதாரண்யம் சாலை நாகை சாலை பழைய பேருந்து நிலையம் ரயில்வே சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மேளதாளம் முழங்க துண்டு பிரசுரங்கள் வழங்கி விவசாய சின்னத்தில் வாக்களிக்க வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் வாக்கு சேகரிப்பின் போது நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

















