சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்த ரூ 2. கோடியே 50 லட்சம் மதிப்பிலான அம்பர் கிரீஸ் பறிமுதல் மன்னார்குடியில் 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி புதிய பேருந்து நிலையத்தில் அம்பர் கிரீஸ் கட்டிகளை கடத்தி விற்பதாக வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவாரூர் மாவட்ட வன அலுவலர் (பொ) கிருத்திகா உத்தரவின் பேரில் மன்னார்குடி வனசரக அலுவலர் சைதானி தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த வடுவூர் வடபாதி வடக்குதெருவை சேர்ந்த சதீஷ் (40) என்பவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் உண்மையை ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது இவரிடம் கிடுக்கி பிடி விசாரணையை தொடங்கியதில் என்னுடன் வந்தவர்கள் தனியார். விடுதியில் தங்கியுள்ளதாக கூறினார் பின்னர் வணக் காவலர்கள் தனியார் விடுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் வடுவூர் வடபாதி நடுத்தெரு பாலமுருகன் (35 ) எளவனூர் வடக்குதெரு முருகானந்தம் (39) விவேகானந்தம் (64) முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம், அடைஞ்சவிளாகம் ஆனந்தராஜ் (39) ஆகியரோடு சேர்ந்து அம்பர் கிரீஸ் கட்டிகளை விற்பனை செய்வதற்காக திருட்டுத்தனமாக . சிங்கபூரிலிருந்து கடத்தி வந்தது தெரியவந்துள்ளது இது தொடர்பாக 5 பேரையும் வனத்துறையினர் அதிரடியாக கைது செய்து அவர்களிடமிருந்து 2.7 கிலோ எடை கொண்ட சுமார் ரூ 2. கோடியே 50 லட்சம் மதிப்பிலான அம்பர்கிரீஸ் கட்டிகளை பறிமுதல் செய்தனர் அம்பர்கிரீஸ் கட்டிகளை கடத்தி வந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சிங்கப்பூரில் இருந்து மன்னார்குடிக்கு கடத்தி வந்த ரூ 2. கோடியே 50 லட்சம் மதிப்பிலான 2.7 கிலோ எடை கொண்ட அம்பர் கிரீசை விற்க முயன்ற 5பேரை வனத்துறையினர் போராடி பிடித்த சம்பவம் மன்னார்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
குறிப்பு குற்றவாளிகள் போட்டோ இணைக்கப்பட்டுள்ளது …
