சீர்காழி காவல் உட்கோட்ட பிரிவு சார்பாக சமத்துவ பொங்கல் விழா அனைத்து காவலர்கள் உற்சாகமாக உறியடித்து நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தனர்
தமிழர்களின் முக்கியமான பண்டிகையாக பொங்கல் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் உட்கோட்ட பிரிவு காவல் நிலையங்கள் சீர்காழி, புதுப்பட்டினம், திருவெண்காடு,பூம்புகார், பொறையார், சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையங்களை சேர்ந்த காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் ,கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் அனைத்து காவலர்களும் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் வைத்து வழிபாடு மேற்கொண்டனர். தொடர்ந்து காவலர்களுக்கு இடையே கைப்பந்து போட்டியும் உரியடி போட்டியும் நடைபெற்றது. இந்த போட்டியில் அனைத்து காவலர்களும் கலந்து கொண்டு உற்சாகமாக சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். உறியடி போட்டியில் சீர்காழி காவல் ஆய்வாளர் உரியை அடித்து வெற்றி பெற்றார். தொடர்ந்து காவலர்கள் நடனமாடி சமத்துவ பொங்கல் விழாவை தங்களது குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்தனர்.இந்த சமத்துவ பொங்கல் விழாவில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின்சீர்காழி காவல்துறை கண்காணிப்பாளர் அண்ணாதுரைஉள்ளிட்டோர் கலந்து கொண்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர்.

















