இத்தாலியில் நடைபெற்ற ஜிடி4 கார் பந்தயத்தில் தமிழ் நடிகரும் ரேசிங் ஆர்வலருமான அஜித் குமார் பங்கேற்றார். பந்தயத்தின் ஒரு கட்டத்தில், முன்னிலைப் பெற்றிருந்த கார் ஒன்று திடீரென டிராக்கின் குறுக்கே நின்றது. இதையடுத்து அதே வழியாக வந்த அஜித் குமார் ஓட்டிய கார், அந்த நின்றிருந்த காருடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில், அஜித் ஓட்டிய காரின் இடதுபுற முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது. இருப்பினும், அதிரடியான சோதனையை எதிர்கொண்ட அஜித் குமார், அதில் எந்தவித காயமுமின்றி தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்துக் காட்சி அஜித் குமார் ஓட்டிய காரில் பொருத்தப்பட்டிருந்த கேமரா மூலம் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர்களிடையே இந்த வீடியோ பெரும் அதிர்வையும் கவலையும் ஏற்படுத்தியுள்ளது.