ஆங்கில புத்தாண்டு 2026 ஐ முன்னிட்டு விழுப்புரம் நகரப்பகுதி சேவியர் காலனி பகுதியில் அதிமுக நிர்வாகிகள் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது.
இதற்கு முன், விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு புத்தாண்டை இறைவேண்டலுடன் வரவேற்றனர்.
இந்த நிலையில், விழுப்புரம் சேவியர் காலனி பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு அதிமுக மகளிர் அணி நிர்வாகி பத்மபிரியா தலைமையில், நகர செயலாளர் பாண்டிமேடு ராமதாஸ், , ரகுமான் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் இனிப்புகளை வழங்கினர்.
மேலும், அதிமுக ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
