நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக தங்க கதிரவன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார் இதில் நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக தங்க கதிரவன் அறிவிக்கப்பட்டுள்ளார் இந்த நிலையில் தங்க கதிரவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அக்கட்சியினரகொண்டாடி வருகின்றனர் புதிய பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தங்கக் கதிரவன் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தன்னை எதிர்த்து நின்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளா ஆளுர் ஷாநவாஸ் சிடம் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தவர் தற்போது நாகை நகர அதிமுக செயலாளர் ஆக தங்க கதிரவன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
