2010-ஆம் ஆண்டு ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் அதர்வா, ‘பரதேசி’, ‘இமைக்கா நொடிகள்’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடையே தனித்துவமான இடத்தை பெற்றுள்ளார். சமீபத்தில் அவர் நடித்த ‘டி.என்.ஏ’ படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், அதர்வா நடித்துள்ள ‘தணல்’ என்ற புதிய திரைப்படம் வெளியுக்குத் தயாராகி வருகிறது. அறிமுக இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முடிந்தது. ஆனால் சில காரணங்களால் படத்தின் வெளியீடு தாமதமானது.
இப்போது, ‘தணல்’ திரைப்படம் ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தப் படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக லாவண்யா திரிபாதி நடித்துள்ளார். இவர் ‘பிரம்மன்’, ‘மாயவன்’ போன்ற தமிழ் திரைப்படங்களில் முன்னதாக நடித்துள்ளார்.
அன்னை பிலிம் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
மேலும், ஷா ரா, செல்வா, பரணி, அழகம் பெருமாள், போஸ் வெங்கட், லட்சுமி பிரியா, பாரத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷக்தி சரவணன் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ள இந்தப் படத்திற்கு கலைவாணன் படத்தொகுப்பை செய்துள்ளார்.