”வடஇந்திய தயாரிப்பாளர்கள் தன்னைக் கவர்ச்சியாக நடிக்க வைக்கின்றனர்” – நடிகை பூஜா ஹெக்டே

மாடலிங் துறையில் கால்பதித்த பூஜா ஹெக்டே, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி படத்தில் அவர் நடித்துள்ளார். இதில் “மோனிகா” பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ரெட்ரோ திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடித்த பூஜா ஹெக்டே, அந்தக் கதாபாத்திரத்திற்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இதுகுறித்து பேசிய அவர்,
“வடஇந்தியாவில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் என்னை கவர்ச்சியான கதாபாத்திரங்களுக்கு மட்டுமே அணுகுகின்றனர். தென்னிந்தியாவில் நான் நடிக்கும் விதவிதமான கதாபாத்திரங்கள் பற்றி அவர்களுக்குத் தெரியாது. அதனால், நான் பல்வேறு வகையான வேடங்களில் நடித்து முன்னேற முயற்சி செய்து வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Exit mobile version