தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நடித்துவரும் நடிகை நிவேதா பெத்துராஜ், தொழிலதிபர் ராஜ்ஹித் இப்ரானை திருமணம் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் “அடியே அழகே” பாடல் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமான நிவேதா, பின்னர் கோலிவுட்டை விட தெலுங்கு திரையுலகில் அதிக கவனம் செலுத்தினார். குறிப்பாக அல்லு அர்ஜுன் நடித்த அலா வைகுண்டபுரம்லோ படத்தில் நடித்ததன் மூலம் நல்ல வரவேற்பைப் பெற்றார்.
மதுரையைச் சேர்ந்த நிவேதா, தற்போது துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜ்ஹித் இப்ரானை மணக்க உள்ளார். கார் ரேஸ்களில் ஆர்வம் கொண்ட ராஜ்ஹித் இப்ரான், கார் கலெக்ஷனில் சிறப்பு ஆர்வம் கொண்டவர் என்றும் கூறப்படுகிறது.
இவரது திருமணம், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற உள்ளது. திருமண தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
திருமண அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, நிவேதா – ராஜ்ஹித் இப்ரான் ஜோடிக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினர் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.