தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த காஜல் அகர்வால் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் விபத்து தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பாலிவுட்டில் அறிமுகமான அவர், பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் கடைசியாக இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தாலும், அவருக்கான காட்சிகள் அதிகம் இடம்பெறவில்லை. அதேபோல், இந்தியன் 3 திரைப்படத்தில் காஜலுக்கு முக்கியமான கதாபாத்திரம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தெலுங்கு படமான கண்ணப்பாவில் பார்வதி தேவியாக நடித்து கவனம் ஈர்த்தார். 2020 ஆம் ஆண்டு கௌதம் கிச்சுலுவை திருமணம் செய்துகொண்ட காஜலுக்கு, 2022ல் மகன் பிறந்தார். திருமணம், குழந்தை, சொந்த தொழில் என சினிமாவில் இருந்து விலகியிருந்த அவர், தற்போது தேர்ந்தெடுத்த சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
இந்நிலையில், காஜல் அகர்வாலுக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால், இதுகுறித்து நடிகை தரப்பில் “இது முற்றிலும் வதந்தி மட்டுமே. காஜலுக்கு எந்தவிதமான விபத்தும் நடக்கவில்லை” என அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதனால், நடிகை காஜல் அகர்வாலின் உடல்நலம் குறித்து பரவி வந்த தகவல் தவறானது என்பதும் உறுதியானது.