நடிகர் விஜய் மீது வருமான வரித்துறை விதித்த அபராத உத்தரவை தாக்கல் செய்த வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் அக்டோபர் 10க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2016-17 நிதியாண்டில் வெளியான புலி திரைப்படத்துக்காக பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை முழுமையாக அறிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டில், வருமானவரித்துறை விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
விசாரணை நடைபெற்றபோது, விஜய் தரப்பில் — “அபராத உத்தரவு விதிக்கப்பட வேண்டிய காலவரம்பு 2019 ஜூன் 30-ம் தேதிக்குள் முடிவடைந்தது. ஆனால் வரித்துறை 2022-ல் தான் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே அந்த உத்தரவு செல்லாது” என வாதிடப்பட்டது.
இதற்கு எதிராக, வருமானவரித்துறை — “சட்டப்படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதில் எந்த குறையும் இல்லை” என வாதித்தது.
விசாரணை முடிவில், இதேபோன்ற வழக்கில் வழங்கப்பட்ட உத்தரவு நகலை தாக்கல் செய்யும்படி நீதிபதி விஜய் தரப்புக்கு உத்தரவிட்டார். பின்னர் வழக்கு அக்டோபர் 10-க்கு ஒத்திவைக்கப்பட்டது.