தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் இடம்பிடித்த பிரபல நடிகர் விஜயகாந்த் இன்று 73வது பிறந்த நாளை ரசிகர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். சினிமாவிலும், அரசியலிலும் தனித்துவமான தடம் பதித்த அவர், உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு காலமானது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் தவெக மாநாட்டில் நடிகர் விஜய், விஜயகாந்தை தனது “அண்ணன்” என்று குறிப்பிடினார். இதையடுத்து, விஜய்க்காக விஜயகாந்த் செய்த ஒரு சம்பவத்தை நடிகர் சதீஷ் பகிர்ந்துள்ளார்.
ஒரு பேட்டியில் சதீஷ் தெரிவித்துள்ளார் :
“செந்தூரபாண்டி படத்தின் ஷூட்டிங் காலத்தில் விஜய் சார் என்னிடம் ஒரு விஷயம் சொன்னார். அப்போது விஜயகாந்த் மிகப்பெரிய ஹீரோ. விஜய் சார் அப்போது ஆரம்பகட்டத்தில் இருந்தார். படப்பிடிப்புக்கு விஜயகாந்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்களாம்.
அப்போ, விஜயகாந்த் விஜயை அழைத்து, ‘இங்க வா… நீயும் கை அசைச்சு வா. இப்படி தான் ரசிகர்கள் கைகாட்ட கற்றுக்கொள்ளணும்’ என்று சொல்லி ஊக்கப்படுத்துவாராம்” என சதீஷ் கூறினார்.
மேலும், விஜய் முன்பு அளித்த பேட்டியிலும்,
“செந்தூரபாண்டி படத்தில் விஜயகாந்த் சார் அண்ணனாக நடித்தார். அந்த படத்தில் அவருக்கு தம்பியாக நான் நடித்தேன். அவரின் மூலமாகவே நான் ரசிகர்களுக்கு அறிமுகமானேன்” என்று தெரிவித்துள்ளார்.
விஜய் கூறிய இந்த சம்பவத்தை சதீஷ் பகிர்ந்ததால், விஜயகாந்தின் பெருந்தன்மை மீண்டும் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
