சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ரவி மோகனின் ஈசிஆரில் உள்ள சொகுசு பங்களாவிற்கு தனியார் வங்கி அதிகாரிகள் ஜப்தி நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். நடிகர் கடந்த சில மாதங்களாக பங்களாவின் மாதாந்திர கடன் தொகையை செலுத்தவில்லை என்பதே இதற்குக் காரணமாக உள்ளது.
ரவி மோகன், மனைவி ஆர்த்தி மற்றும் குடும்பத்துடன் வசித்து வந்த ஈசிஆர் பங்களாவை விட்டு தற்போது வேறு இடத்தில் தங்கியுள்ளார். இவரது கடன் தொகை ரூ.7.60 கோடி வரை உள்ளது. வங்கி அதிகாரிகள் பலமுறை EMI செலுத்துமாறு அறிவுறுத்திய நிலையில், ரவி மோகன் இதற்காக நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் இன்று வங்கி அதிகாரிகள் பங்களாவை நேரடியாக ஜப்தி செய்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். வங்கியின் அறிவுரைகள் பின்பற்றப்படாவிட்டால், அந்த சொத்து வங்கி வசத்தில் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். தற்போதைய நிலையில், நடிகர் கெனிஷா என்ற பாடகியுடன் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதாகவும், இது ரசிகர்கள் மற்றும் ஊடகங்களில் பேசபடுவதாகவும் கூறப்படுகிறது.
நடிகரின் குடும்ப விவகாரம் மற்றும் வங்கி கடன் நிலை, அவருக்கு தற்போதைய காலத்தில் நெருக்கடியான சூழ்நிலை உருவாக்கியுள்ளது.
















