5 கோடி மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது !

பிரபல நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ உள்ளிட்ட திரைப்படங்களில் தனது நகைச்சுவை நடிப்பில் பிரபலமானவர் சீனிவாசன். மதுரையை பூர்வீகமாக கொண்ட இவர் தொழில்முறை அக்கு பஞ்சர் மருத்துவரும் ஆவார்.

2018ம் ஆண்டு டிசம்பரில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வருடத்திலிருந்து அவர் விசாரணைகளில் இருந்து தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.

தற்போது, ₹1000 கோடி கடன் வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்து, ₹5 கோடி வரை ஏமாற்றியதாக கூறப்படும் மோசடி வழக்கில், டெல்லி பொருளாதார குற்றப்பிரிவினர் (EOW) அவரை கைது செய்துள்ளனர்.

இதற்கு முன்னரும், அவர் இரண்டு முறை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version