திருப்பத்தூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் செயல் வீரர்கள் கூட்டம்

திருப்பத்தூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது *

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த வேலண் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் மேற்கு மாவட்ட திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

அப்போது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தை எவ்வாறு வெற்றி பெற செய்வது, எவ்வாறு தொண்டர்கள் நிர்வாகிகள் செயல்பட வேண்டும், தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகளை எவ்வாறு பொதுமக்களிடம் எடுத்து செல்வது என்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில். மாவட்ட இணைச் செயலாளர் சுகன்யா சந்தோஷ். நகர செயலாளர் விமல். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சாந்தகுமார். ஒன்றிய செயலாளர்கள். சாமிநாதன் சிவபெரியசாமி முருகன். நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version