மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசரசிகிச்சைப் பிரிவில் மழைநீர் புகுந்தது. இதனையடுத்து அங்கு சிகிச்சையில் இருந்த நோயாளிகள் மாற்று இடத்திற்கு மாற்றப்பட்டனர்.
தெற்கு வங்கக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலுவிவருவதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் கடலோர டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைப் பெய்ய தொடங்கியது. மயிலாடுதுறை, திருவாவடுதுறை, திருவாலங்காடு, குத்தாலம், கோமல், மல்லியம், தருமபுரம், மன்னம்பந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பல்வேறு பகுதிகளில் பெய்து வருகிறது.
இந்த நிலையில் கனமழை காரணமாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசரசிகிச்சைப் பிரிவில் மழைநீர் புகுந்தது. இதனையடுத்து அங்கு சிகிச்சையில் இருந்த நோயாளிகள் மாற்று இடத்திற்கு மாற்றப்பட்டனர்.
















