மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல ஓலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு, வீடியோ காட்சிகள் வைரல் :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நலத்துடி கிராமத்தைச் சேர்ந்தவர் மேகநாதன், இவர் பிரபல எலக்ட்ரிக் பைக் நிறுவனமான ஓலா நிறுவனத்தின் பேட்டரி இருசக்கர வாகனம் வாங்கி ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று, வாகனத்திற்கு வீட்டில் மின்சாரம் மூலம் சார்ஜ் செய்த பொழுது, திடீரென்று வாகனத்தின் உட்புறம் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக மின் இணைப்பை துண்டித்து, வாகனத்தை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இது குறித்து ஓலா நிறுவனத்திடம் மேகநாதன் அளித்த புகாரின் பேரில், வாகனத்தை ஆய்வு செய்த நிறுவன தொழில் நுட்ப ஊழியர்கள், சார்ஜ் செய்யும் பொழுது ஒயரில் ஏற்பட்ட சார்ட் சர்க்யூட் காரணமாக தீப்பற்றி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரிந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.













