மத்திய அரசைக் கண்டித்து திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை சிதைக்கும் நோக்கில் செயல்படுவதாகக் கூறி, 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை மாற்றியதைக் கண்டித்தும், மீண்டும் மகாத்மா காந்தி பெயரை வைக்க வலியுறுத்தியும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசைக் கண்டித்தும், திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயரை வைக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் விஜய் இளஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது
ஆா்ப்பாட்டத்தில் நகர தலைவா் பாரத், மற்றும் மாவட்ட நிா்வாகிகள் நகர நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனர்

















