தமிழ் சினிமாவில் வெற்றிப் படங்களின் கைவசம் கொண்ட இயக்குனராக பெயர் பெற்றவர் கே.எஸ். ரவிக்குமார். நாட்டாமை, முத்து, படையப்பா, தசாவதாரம், வரலாறு உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர்.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
“ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து 27 ஆண்டுகளை நிறைவு செய்த படையப்பா திரைப்படம் விரைவில் ரீ-ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதுமட்டுமல்லாமல், ரஜினி மற்றும் கமல்ஹாசனை ஒரே படத்தில் இணைத்து இயக்க திட்டமிட்டுள்ளேன்,” என கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான தகவல் வெளிவந்த உடனே, ரஜினி–கமல் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெரும் உற்சாகத்துடன் வரவேற்று வருகின்றனர்.
 
			
















