சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக செஞ்சி பேரூராட்சியில் 5.59கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமூக நீதி மாணவியர் விடுதியை திறந்து வைத்தார்.
இதையடுத்துசமூக நீதி மாணவியர் விடுதி கட்டிடத்தில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ,விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் வளர்மதி, தாட்கோ செயற் பொறியாளர் அன்பு சாந்தி
செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலிமஸ்தான், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்


















