ராஜஸ்தானின் சவாய் மாதோபூர் அருகே உள்ள ரந்தம்போர் தேசிய பூங்காவில் ஒருவர் புலிக்குட்டிகளை தொட்டு பார்த்துள்ளார். அவற்றுடன் விளையாடி உள்ளார். இது குறித்து வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. பின்னர் இந்த நிகழ்வு பேசும் பொருளானது.
இது, புலிகள் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியது. வன உயிரின ஆர்வலர்கள், ராஜஸ்தான் அரசுக்கு கேள்விகளை எழுப்பினர்.
இதையடுத்து, புலிக்குட்டிகளை தொட்டுப் பார்த்த அடையாளம் தெரியாத அந்த நபர் மீது போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர். நாட்டின் வனவிலங்குகள், பறவைகள் மற்றும் தாவர இனங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் சட்டத்தின் கீழ், எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது