அரசு அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டமா..? அரசியல்வாதிகளுக்கான அரசு கூட்டமா..? செய்தியாளர்கள் இருக்கையில் அமர்ந்த அரசியல்வாதிகள் – மாடி படிக்கட்டுகளில் அமர்ந்த பத்திரிக்கையாளர்கள்..
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சரும் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சருமான விஸ்வநாதன் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்ற வருகிறது. இந்த ஆய்வு கூட்டத்தில் செய்தியாளர்கள் அமர்வதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆளும் கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமான அமர்ந்தனர். இதனால் செய்தியாளர்கள் இடமில்லாமல் கூட்ட அரங்கிற்கு வெளியே மாடி படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தனர். இது மட்டுமல்லாமல் அதிகாரிகளுக்கு என நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பெரும்பாலான அரசியல் கட்சி பிரதிநிதிகள், நிர்வாகிகள் மற்றும் அமைச்சரின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதால், *ஆய்வு கூட்டம் நடக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்சி அலுவலக மாறிய அதிர்ச்சி சம்பவம் திருவாரூரில் நடைபெற்று வருகிறது..















