சீர்காழி இந்து திராவிட மக்கள் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் நூதன முறையில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்
சுகாதாரம் மற்றூம் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாததை கண்டித்து மருத்துவமனையில் செலுத்தும் சிலேன் பாட்டில் மற்றும் காலி குடுத்துடன் வந்தார் வியந்து பார்த்த பொதுமக்கள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தனி சட்டமன்ற தொகுதி தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறும் நிலையில் இன்று அதற்கான வேட்புமனு தாக்கல் பரபரப்பாக செய்யப்பட்டு வருகிறது ,இதற்காக சீர்காழி அருகே ஓத வந்தால் குடியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் அடிப்படை வசதிக்கான குடிநீர் ,சுகாதாரம்,சாலை உள்ளிட்டவை இல்லாமல் உள்ளதை கண்டித்து வேட்பாளர் பாண்டியன் சீர்காழி அரசு தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததை சுட்டிக்காட்டி சிலேன் பாட்டிலுடன் மேலும் குடிநீர் வசதி இல்லாததை கண்டித்து காலி குடத்தனுடன் நூதன முறையில் வேட்புமனுவை தாக்கல் செய்ய சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ் இடம் விருப்பமனுவை தாக்கல் செய்யதார் அவர் தாக்கல் செய்ய வரும்போது எடுத்து வந்த சிலைன் பாட்டில் மற்றும் காலி குடத்தை கண்டு மக்கள் வியப்பாக பார்த்தனர்

















