‘கனா’ திரைப்படத்துக்குப் பிறகு, 2019-ஆம் ஆண்டு ‘தும்பா’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார் தர்ஷன். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
அதனைத் தொடர்ந்து, இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் தர்ஷன் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘ஹவுஸ் மேட்ஸ்’. இந்தப் படத்தில் அர்ஷா பைஜு, காளி வெங்கட், வினோதினி மற்றும் தீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தை சிவகார்த்திகேயனின் SK ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ப்ளேஸ்மித் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.
இந்த திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியிடப்பட இருக்கிறது. இதற்காக சமீபத்தில் நடைபெற்ற ப்ரிவ்யூ காட்சியை நடிகர் சிவகார்த்திகேயன் பார்வையிட்டுள்ளார்.
சமீபத்தில் வெளியான டிரெய்லர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கதையின்படி, கதாநாயகன் ஒரு வீடு வாங்குகிறார். அந்த வீட்டில் அமானுஷ்யமான சம்பவங்கள் நடைபெறத் தொடங்குகிறது. இது ஒரு காமெடி ஹாரர் வகைச் திரைப்படமாக உருவாகியுள்ளது.