June 18, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மாம்பழ விவசாயிகள் நஷ்டத்தில் தவிப்பு; அமைச்சர், துறை இயக்குனர் அமெரிக்கா பயணம் – விவசாயிகள் கடும் எதிர்ப்பு

by Divya
June 24, 2025
in News
A A
0
மாம்பழ விவசாயிகள் நஷ்டத்தில் தவிப்பு; அமைச்சர், துறை இயக்குனர் அமெரிக்கா பயணம் – விவசாயிகள் கடும் எதிர்ப்பு
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

தமிழகத்தின் பல மாவட்டங்களில் மாம்பழங்கள் அதிகமாக விளைந்துள்ள நிலையில், விற்பனைக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதே நேரத்தில், வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வமும், தோட்டக்கலைத் துறை இயக்குனர் குமரவேல் பாண்டியனும் அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் இருப்பது விவசாயர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விலை வீழ்ச்சி – விவசாயிகள் நஷ்டத்தில்

திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மாம்பழங்கள் பெருமளவில் விளைந்துள்ளன. அதேபோல் ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலும் அதிக உற்பத்தி ஏற்பட்டுள்ளது. இது விலையை கணிசமாக குறைத்துள்ளது. கடந்த ஆண்டு கிலோவுக்கு ரூ.150 வரை விற்ற மாம்பழங்கள், தற்போது கிலோவுக்கு ரூ.40க்கும் கீழ் விற்பனை ஆகின்றன. சில இடங்களில், 3 கிலோ ரூ.100க்கே விற்பனை நடைபெறுகிறது.

மாம்பழ கூழ் தயாரிக்கும் ஆலைகள், தற்போது கொள்முதல் விலையை கிலோ ரூ.4 என நிர்ணயித்துள்ளன. கடந்த ஆண்டு இது கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை இருந்தது. மேலும், தமிழக மாம்பழங்களை வாங்குவதற்கு ஆந்திரா தடை விதித்துள்ளதால், விற்பனைக்கே வாய்ப்பு இல்லை. பல டன் மாம்பழங்கள் வீணாகி குப்பைகளிலும் நீர்நிலைகளிலும் அகற்றப்படுகின்றன.

அமைச்சரின் வெளிநாட்டு பயணம் – விவசாயிகள் அதிருப்தி

விவசாயிகள் கடும் நஷ்டத்தில் தவிப்பது ஒருபுறம் இருக்க, வேளாண் துறை அமைச்சர் மற்றும் தோட்டக்கலைத் துறை இயக்குநர் அமெரிக்கா பயணம் செய்துள்ளனர். இந்த பயணம், விவசாயிகள் பிரச்சனைகள் முடிவுக்கு வராமல் போக காரணமாக அமைந்துள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் இயக்குநர் குமரவேல் பாண்டியன் இருவரும் ஜூன் 29ம் தேதி திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடவடிக்கை எடுக்க வேண்டும் – எதிர்க்கட்சி கடும் கண்டனம்

மாம்பழ விவசாயிகளின் நலனுக்காக, மதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கர்நாடக மாநில விவசாயிகளுக்குப் போல, தமிழக விவசாயிகளுக்கும் மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளார்.

இழப்பீடு வேண்டும்

‘கர்நாடக விவசாயிகளுக்கு வழங்குவது போல, தமிழக மாம்பழ விவசாயிகளுக்கும் மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்’ என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கையில் : மாம்பழம் விலை சரிவால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான குரலாய் அ.தி.மு.க., சார்பில், கிருஷ்ணகிரியில் கடந்த 20ம் தேதி உண்ணாவிரதப் போராட்டமும், திண்டுக்கலில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.மாம்பழ விவசாயிகளின் கோரிக்கைகளை, மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என, இந்த போராட்டங்களின் போது வலியுறுத்தினோம்.

ஆனால், வழக்கம்போல தி.மு.க., அரசு, விவசாயிகளின் கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை. வேளாண் துறை அமைச்சரோ, வெளிநாட்டு சுற்றுலாவில், ‘பிசி’யாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. மத்தியில் கூட்டணியாக 39 எம்.பி.,க்களை வைத்திருந்தும், மாம்பழ விவசாயிகளுக்காக தி.மு.க., குரல் கொடுக்கவில்லை.

விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட தி.மு.க., அரசிடம், விவசாயிகள் நலன் பற்றி எப்படி எதிர்பார்க்க முடியும்? இந்நிலையில், கர்நாடக மாநில மாம்பழ விவசாயிகளுக்கு, பி.டி.பி.எஸ்., எனப்படும் விலை பற்றாக்குறை செலுத்தும் திட்டத்தின்படி, மத்திய அரசு இழப்பீடு அறிவித்துஉள்ளது.

விவசாயிகள் நலன்காக்கும் நோக்கில், பிரதமர் மோடி அரசு எடுத்துள்ள இந்த முடிவு வரவேற்கத்தக்கது. இத்தகைய இழப்பீட்டை தமிழக விவசாயிகளுக்கும் மத்திய – மாநில அரசுகள் வழங்க வேண்டும். இந்த இழப்பீடு, ஆண்டுக்கு ஒருமுறை விளைவிக்கப்படும் மாம்பழங்களுக்கு ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சியால், துயரில் உள்ள விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

அ.தி.மு.க., என்றென்றும் விவசாயிகளுடன் துணை நிற்கும்; அவர்களின் குரலாக என்றென்றும் ஒலிக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். மாம்பழ விவசாயிகளுக்கு ஆதரவாகவும், தமிழக அரசை கண்டித்தும், வரும் 30ம் தேதி காலை, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தலைமையில், கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

நியாயமான கொள்முதல் விலை தேவை – சீமான் வலியுறுத்தல்

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், “ஆந்திர மாநிலம் குறைந்தபட்ச கொள்முதல் விலையை நிர்ணயித்து விவசாயிகளை பாதுகாத்தது போல், தமிழக அரசும் அதேபோல் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், மாநிலத்தில் உள்ள ஜூஸ் ஆலைகளில் உற்பத்தியை மீண்டும் தொடங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags: america tourDMDKEPSmango farmersmangolossntk
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மேகாலயா கொலைக்கு பிந்தைய அதிர்ச்சி : ஆந்திராவில் திருமணமான ஒரே மாதத்தில் கணவர் கொலை – புதுப் பெண் கைது !

Next Post

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு ரூ.2,000 கோடியில் அவசரகால ஆயுத கொள்முதல் ஒப்பந்தம்!

Related Posts

மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு
News

கூட்டுறவு கடன் தள்ளுபடி பிரச்சனையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம்

June 15, 2026

திருப்பத்தூர் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடும் பணித்தள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கமனு

ஆம்பூர் அருகே கல்வி கற்பது தொடர்பாக வகுப்பறையில் சந்தேகம் கேட்ட மாணவியை அவதூறாக பேசி தலையில் அடித்து துன்புறுத்திய அரசு பள்ளி ஆசிரியர்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னையும், தன் குடும்பத்தாரையும் அடைத்து வைத்து கொலைமிரட்டல் நடவடிக்கை எடுக்க மனு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றுப் பகுதியில் அரிய வகை நீர்வாழ் பறவைகள் வருகை!

December 28, 2025
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

கூட்டுறவு கடன் தள்ளுபடி பிரச்சனையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம்

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

திருப்பத்தூர் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடும் பணித்தள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கமனு

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

ஆம்பூர் அருகே கல்வி கற்பது தொடர்பாக வகுப்பறையில் சந்தேகம் கேட்ட மாணவியை அவதூறாக பேசி தலையில் அடித்து துன்புறுத்திய அரசு பள்ளி ஆசிரியர்

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

கூட்டுறவு கடன் தள்ளுபடி பிரச்சனையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம்

0
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

திருப்பத்தூர் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடும் பணித்தள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கமனு

0
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

ஆம்பூர் அருகே கல்வி கற்பது தொடர்பாக வகுப்பறையில் சந்தேகம் கேட்ட மாணவியை அவதூறாக பேசி தலையில் அடித்து துன்புறுத்திய அரசு பள்ளி ஆசிரியர்

0
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னையும், தன் குடும்பத்தாரையும் அடைத்து வைத்து கொலைமிரட்டல் நடவடிக்கை எடுக்க மனு

0
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

கூட்டுறவு கடன் தள்ளுபடி பிரச்சனையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம்

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

திருப்பத்தூர் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடும் பணித்தள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கமனு

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

ஆம்பூர் அருகே கல்வி கற்பது தொடர்பாக வகுப்பறையில் சந்தேகம் கேட்ட மாணவியை அவதூறாக பேசி தலையில் அடித்து துன்புறுத்திய அரசு பள்ளி ஆசிரியர்

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னையும், தன் குடும்பத்தாரையும் அடைத்து வைத்து கொலைமிரட்டல் நடவடிக்கை எடுக்க மனு

June 15, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.