September 24, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

13 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு 40 ஆண்டுகள் கடுங்காவல் சிறை..!

by Priscilla
June 20, 2025
in News
A A
0
13 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு 40 ஆண்டுகள் கடுங்காவல் சிறை..!
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்த நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி அதே ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 2019 ஆம் ஆண்டு எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த சிறுமியின் மாமன்மகன் பார்த்தசாரதி(26) என்பவர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து,

கடந்த 23-06-2019 அன்றும் அதனை தொடர்ந்து பல நாட்கள் பாலியல் உறவுக்கு உட்படுத்தியுள்ளார். அதனால் அந்த சிறுமி கருவுற்றுள்ளார் அதனை அறியாமலேயே சிறுமி தொடர்ந்து பள்ளிக்கு சென்ற நிலையில் கடந்த
09-11-2019 ஆம் தேதி பள்ளியில் மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.

பள்ளியின் ஆசிரியர்கள் நெய்குப்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறுமியை அழைத்து சென்று பரிசோதித்த போது சிறுமி கற்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமியை பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை
யில் அவரது அம்மா அழைத்து வந்து பரிசோதித்தபோது பாதிக்கப்பட்ட சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியை விசாரித்த போது தனது தாய் மாமன் மகன் பார்த்தசாரதி தான் தனது கர்ப்பத்திற்கு காரணம் என நடந்த சம்பவங்களை கூறியிருக்கிறார். அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரும் பார்த்தசாரதியின் அப்பா கருணாநிதியும் வெண்பாவூரில் உள்ள அவர்களின் குலதெய்வ கோயிலில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், பார்த்தசாரதிக்கும் குழந்தை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் கோபிநாத் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டு பார்த்தசாரதி கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு பெரம்பலூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தையின் உயிரியல் தந்தை பார்த்தசாரதி தான் என்பது மரபணு பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த பெரம்பலூர் மகிளா நீதிமன்ற அமர்வு நீதிபதி இந்திராணி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு எதிராக பலமுறை பாலியல் தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக பார்த்தசாரதிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையுடன் ரூபாய் ஐம்பதாயிரம் அபராதம் விதித்தும்,

அபராதம் கட்ட தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டதோடு பாதிக்கப்பட்ட சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றத்திற்கு 20 ஆண்டுகள் கடுங் காவல் சிறை தண்டனையும் ரூபாய் 50,000 அபராதமும் விதித்ததோடு அபராதம் கட்ட தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமியை குழந்தை திருமணம் செய்த குற்றத்திலிருந்து பார்த்தசாரதியையும் குழந்தை திருமணம் நடத்தி வைத்த குற்றச்சாட்டுகளிலிருந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பார்த்தசாரதியின் பெற்றோரையும் அந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்தும் நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பார்த்தசாரதி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags: 13 years girlChild abduction caseschool studentyouth
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திண்டுக்கல் : மதிய உணவுக்குப் பிறகு மயங்கி விழுந்த தனியார் பள்ளி மாணவி உயிரிழப்பு

Next Post

8 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து – சென்னையில் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்

Related Posts

FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு
News

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

September 22, 2026

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக 25 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

October 6, 2025
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

July 27, 2026
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் நூதன போராட்டம்

May 31, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

குத்தாலம் அருகே ராஜகோபால புரத்தில் உள்ள ஸ்ரீ ஐயன் பிடாரி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

May 14, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

0
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு

0
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

0
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

0
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

September 22, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.