மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழகத்தில் தனது 38-வது புதிய ஷோரூமை பிரபல நடிகை ஸ்ருதி ஹாசன் திருவள்ளூரில் திறந்து வைத்தார்…
பிரபல தங்கம் மற்றும் வைர நகை விற்பனை நிறுவனமான மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் தனது 38-வது புதிய பிரம்மாண்டமான ஷோரூமை திருவள்ளூர் ஜே.என். சாலையில் பிரபல நடிகை ஸ்ருதி ஹாசன் திறந்து வைத்தார். இந்த ஷோரூமில் அதிகமான இட வசதி, அதிகமான மாடல்கள் மற்றும் டிசைன்கள் ஆகியவை இந்த ஷோரூமில் இடம்பெற்றுள்ளன. இந்த புதிய ஷோரூம் திறப்பு விழாவை முன்னிட்டு நவம்பர் 30-ந் தேதி வரை வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையாக 2 கிராம் அதற்கு மேற்பட்ட நிகரான எடையுள்ள தங்க நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 1 கிராம் வெள்ளி நாணயம் இலவசமாக வழங்கப்படும் எனவும், 1 கிராம் நிகர எடையுள்ள அன்கட் அல்லது நவரத்தின நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 1 கிராம் வெள்ளி நாணயம் இலவசமாக வழங்கப்படும் மேலும் ரூ.30 ஆயிரம் அல்லது அதற்கு மேல் மதிப்புள்ள வைர நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 5 கிராம் வெள்ளி நாணயம் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்நிகழ்ச்சியில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு தலைவர் யாசர், தமிழ்நாடு மண்டல வணிக தலைவர் சபீர் அலி, தமிழ்நாடு வடக்கு மண்டல தலைவர் அமீர் பாபு, உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.







