காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் பகுதியில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் பிறந்த நாள் முன்னிட்டு,
திருப்பெரும்புதூர் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள,
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி திருவுருவ சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் போந்தூர் பாஸ்கர் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி,
ஆளுமையின் அடையாளமாக திகழ்ந்த எங்களுடைய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்களின் பிறந்த நாளில்,
எங்களுடைய தலைவர் ராஜீவ் காந்தி அவர்களின் உயிர் தியாகம் செய்த திருப்பெரும்புதூர் பகுதி முழுவதும் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக மாற்றி அமைப்பதற்குரிய கட்சியினுடைய வேலைகளை கிராமம்தோறும் முன்னெடுத்து தலைவராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவோம் என்று உறுதி ஏற்று எங்களுடைய கட்சிப் பணி தொடரும்! தொடரும்! தொடரும் !
என்று எமது நிருபருக்கு அளித்த பேட்டியில் போந்தூர்பாஸ்கர் அவர்கள்
தெரிவித்துள்ளார்,
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டம் முன்னாள் மாவட்ட துணை தலைவர் வீரராகவன், மேட்டுப்பாளையம் ராஜீவ் காந்தி, கீவளூர் மனோகரன்,பிரபாகரன், மற்றும் பல காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்







