நேற்று நடைபெற்ற காவிரித் துலா உற்சவத்தில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குழுமியிருந்த நிலையில், திருடர்கள் கைவரிசை, தாலி செயினை பறிகொடுத்த பெண்கள் 20 சவரன் நகை திருட்டு சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை :-
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் புகழ்பெற்ற காவிரி துலா உற்சவ கடை முக தீர்த்தவாரி நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெறும் இடத்தில், சுவாமி தரிசனம் செய்வதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இருந்த போதும் தீர்த்தவாரி உற்சவத்தில் கூட்டத்தை பயன்படுத்தி செயின்பறிப்பு சம்பவம் நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 20 பவுன் திருடப்பட்டதாக கூறப்படும் நிலையில் கும்பகோணத்தை சேர்ந்த சாந்தி என்ற பெண்மணியின் நாலரை பவுன் தங்க செயின், மயிலாடுதுறை சேர்ந்த கோமதி என்பவரிடம் 5 பவுன் ஆரவல்லி என்பவரிடம் 6 பவுன் ஆகிய 2 தாலி செயின்கள் திருடப்பட்டதாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








