பணியில் இருந்த அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துனர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை கைது செய்யாததை கண்டித்தும் பணியில் இருக்கும் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் சமூக விரோதிகள் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிந்திட வலியுறுத்தியும் பணியில் இருக்கும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட தனிச்சட்டம் இயற்ற வேண்டியும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ராணித் தோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்கள் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
கடந்த ஒரு வாரத்தில் இங்குள்ள அரசு பேருந்து 576/ D வழிதடத்தில் உடன்குடி பகுதியில் சென்று கொண்டிருந்த போது சிறிய விபத்து காரணமாக ஒரு கும்பல் ஒட்டுனரையும் நடத்தினரையும் கொலை வெறி தாக்குல் நடத்தினார்கள். அந்த சமூக விரோதிகளை இதுவரை கைது செய்யவோ அவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை.
அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும் இது போன்ற நடவடிக்கை எடுக்க முன் வராத த.வெ.க அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் கோஷங்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி ஐ டி யு பொதுச் செயலாளர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் விஜயகுமார் மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் சிவன் பிள்ளை lpf பொதுச் செயலாளர் கண்ணன் பிஎம்எஸ் பொதுச்செயலாளர் கிரிஷ் , ஹெச்.எம் .எஸ் தலைவர் முத்துக் கருப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் 200 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்
VISUAL : 1 நாகர்கோவில் அருகே அரசு போக்கு வரத்து கழக பணிமனை
- தொழிற்சங்கள் முற்றுகை போராட்டம்
- பேட்டி : சுரேஷ் ( பொது செயலாளர் ClTU – நாகர்கோவில் )







