நகராட்சி, பேரூராட்சிக்கு வழங்கவேண்டிய நிதியை முடக்கி வைத்திருக்கும் தமிழக அரசை கண்டித்து கீழ்வேளூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
நாகை நகராட்சி, கீழ்வேளூர் பேரூராட்சி, வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதிகளில் குடிநீர், சாலை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்க் கொள்ளுவதற்கான நிதியை வழங்காமல் தமிழக அரசு முடக்கி வைத்திருக்கிறது. இதனால் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியாமல் உள்ளது. இதனை கண்டித்து கீழ்வேளூர் பேரூராட்சி முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படனர். மாவட்டச் செயலாளர் மாரிமுத்து தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேரூராட்சி நிதியை முடக்கி வைத்திருக்கும் தமிழக தவெக அரசை கண்டித்தும். முடக்கி வைத்துள்ள நிதியினை உடனடியாக விடுவிக்க கோரியும், உள்ளாட்சிகளின் அதிகாரத்தை பறிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கண்டன முழக்களை எழுப்பினர். இதே போன்று நாகை நகராட்சி, வேளாங்கண்ணி பேரூராட்சி, திட்டச்சேரி பேரூராட்சி, தலைஞாயிறு பேரூராட்சி, வேதராண்யம் நகராட்சி அலுவலகம் முன்பாக கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது







