ஆம்பூரில் விஜய பாரத மக்கள் கட்சி சார்பில் முப்பெரும் விழா – தூய்மைப் பணியாளர்களுக்குப் பாத பூஜை செய்து புத்தாடைகள், பலகாரங்கள் வழங்கி கௌரவிப்பு!
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் விஜய பாரத மக்கள் கட்சி சார்பில் முப்பெரும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.ஆம்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பவள விழா, பாரத ஆட்சியின் தலைமைச் சேவகராக 25 ஆண்டுகள் நிறைவு செய்ததைக் கொண்டாடும் விழா மற்றும் தீபாவளிப் பெருவிழா என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.இதன் ஒரு பகுதியாக, ஆம்பூர் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு பாத பூஜை செய்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்குப் புத்தாடைகள் மற்றும் பலகாரங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட தவத்திரு சாக்த ஸ்ரீ வாராஹிதாசர் குருஜி அவர்கள், தூய்மைப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டிப் பேசினார். மேலும், மத்திய அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்தும் உரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் விஜய பாரத மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஜெய்சங்கர், மாநிலத் துணைத் தலைவர் சத்யநாராயணன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள், பொதுமக்கள், தூய்மைப் பணியாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
பேட்டி :ஜெய்சங்கர் விஜய பாரத மக்கள் கட்சி நிறுவனர்








