வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் எலைட் மதுபான கடைகள் என 98 மதுபான கடைகள் உள்ளது.
குடியாத்தத்தில் பரதராமி, பாக்கம்,மோர்தானா கூட்ரோடு,உள்ளி ரயில்வே மேம்பாலம்,உள்ளி கூட்ரோடு, மேல்ஆலத்தூர் ரோடு, பொன்னம்பட்டி, கொண்டசமுத்திரம், மேல்ஆலத்தூர் என மொத்தம் ஒன்பது கடைகள் உள்ளது தினம்தோறும் இந்த டாஸ்மாக் ஒன்பது கடைகளில் 30 லட்சத்திலிருந்து 40 லட்ச ரூபாய் வரை விற்பனை நடைபெற்று வந்தது ஞாயிற்றுக்கிழமைகளில் 55 லட்சம் முதல் 60 லட்சம் வரை விற்பனை நடைபெற்று வந்தது சாதாரண நாட்களில் ஒரு மதுபான கடைக்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் மது பிரியர்கள் வருவார்கள் ஞாயிறு மற்றும் விடுமுறை காலங்களில் குறைந்தபட்சம் 5 ஆயிரம் மது பிரியர்கள் வருவது வழக்கம் டாஸ்மாக் நிர்வாகம் புதிதாக ஒரு உத்தரவை பிறப்பித்தது அதன்படி நவம்பர் ஒன்றாம் தேதி முதல் மது பாட்டில்கள் வாங்கும் மது பிரியர்கள் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும் மது பாட்டிலில் உள்ள ஸ்டிக்கர்களை டாஸ்மாக் ஊழியர்கள் ஸ்கேன் செய்ய வேண்டும் மது பிரியர்கள் மது குடித்தபின் அந்த பாட்டிலை திருப்பி அளித்தால் அதனை ஸ்கேன் செய்து கொண்டு பத்து ரூபாய் திருப்பி தர வேண்டும் என உத்தரவு போட்டது அதனைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்க வேண்டும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் 11:30 மணி அளவில் மது பிரியர்கள் திரண்டு இருந்தனர் டாஸ்மாக் கடை 12 மணிக்குத் திறந்ததும் பாட்டில்களை ஸ்கேன் செய்தால் ஸ்கேன் ஆகவில்லை பலமுறை முயற்சி செய்தும் ஸ்கேனாகவில்லை அதேபோல் குடியாத்தம் மட்டுமல்ல மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளிலும் ஸ்கேன் செய்யும் போது ஸ்கேன் பணி செய்யவில்லை இதனால் திரண்டு இருந்த மதிப்பெரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர் அவர்கள் டாஸ்மாக் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் எங்களிடம் கூடுதலாக பத்து ரூபாய் பாட்டிலுக்கு வாங்கிக் கொள்ளுங்கள் ஸ்கேன் செய்யாமல் தாருங்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அப்போது டாஸ்மாக் ஊழியர்களோ அதுபோல் ஸ்கேன் செய்யாமல் பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்க கூடாது அது போல் வாங்கினால் எங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார்கள் என பதிலுக்கு தெரிவித்தனர்இருப்பினும் அதனை ஏற்காமல் டாஸ்மாக் கடை முன்பு மது பிரியர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு கூச்சலிட்டபடி இருந்தனர்
தகவல் அறிந்து விரைந்து வந்த குடியாத்தம் போலீசார் மது பிரியர்களை கடைக்கு முன் திரண்டு ரகளையில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அப்புறப்படுத்தினார்கள்
அப்போது டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது நவம்பர் 1 முதல் இந்த புது உத்தரவு அமலில் வந்துள்ளது ஒவ்வொரு மது பாட்டில்களுக்கும் பத்து ரூபாய் வாங்க வேண்டும் அந்த பத்து ரூபாய்க்காக அந்த மது பாட்டிலில் உள்ள ஸ்டிக்கரை ஸ்கேன் செய்ய வேண்டும் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான டாஸ்மாக் கடைகளில் ஸ்கேன் செய்யும் போது சர்வர் செயல்படவில்லை மறு உத்தரவு வரை விற்பனை செய்ய முடியாமல் காத்திருக்கிறோம் என்றார் டாஸ்மாக் கடையில் ஸ்கேன் ஆகாமல் ஒவ்வொரு கடை முன்பு நூற்றுக்கணக்கான மது பிரியர்கள் மது பாட்டில் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர் அப்போது அவர்கள் கூச்சலிட்டபடியும் கடைக்காரர்களையும் டாஸ்மாக் நிர்வாகத்தையும் திட்டியபடி சென்றனர்







