மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் சமுதாய வளைகாப்பு விழா – 2026!
மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் இன்று (30.10.2026) சமுதாய வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.எல். விஜய பிரபு அவர்கள் கலந்து கொண்டு, வளைகாப்பு நிகழ்வில் பங்கேற்ற கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
கர்ப்பிணித் தாய்மார்களின் ஊட்டச்சத்து, உடல்நலம் மற்றும் தாய்சேய் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.
அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களும் ஆரோக்கியத்துடன் சுகப்பிரசவம் கண்டு, நலமுடன் குழந்தைச் செல்வங்களைப் பெற்றெடுக்க தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.








