தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து திருவாரூரில் திமுக முன்னாள் அமைச்சர் தமிழரசி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே சட்டம் ஒழுங்கு சீர்கேடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் விலைவாசி உயிர்களை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தமிழரசி ரவிக்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
தொடர்ந்து விலைவாசி உயர்வு மற்றும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்காத தமிழக வெற்றிக்கழக அரசை கண்டித்து முழக்கம் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.








