தரங்கம்பாடி தாலுக்காவில் காலையில் மிகக் கடுமையான பனிப்பொழிவு பனிமூட்டம் எதிரே வருபவர்கள் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு இருந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சுற்று வட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் பரவலாக மிதமான மற்றும் கனமழை பெய்தது இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்து காணப்படுகிறது நேற்று முழுவதும் மழை இல்லாத நிலையில் இன்று அதிகாலையில் பனிப்பொழவு காணப்பட்டது மேலும் காலை நேரத்தில் தரங்கம்பாடி தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகள் முழுவதிலும் மிகக் கடுமையான பனி மூட்டம் பனிப்பொழவு இருந்தது சில தினங்களுக்கு முன்னர் காலை நேரத்தில் மிதமான பனிபொழிவு இருந்த நிலையில் இன்று காலையில் மிகக் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது எதிரே வருபவர்கள் சாலையில் வருபவர்கள் தெரியாத அளவிற்கு எங்கு பார்த்தாலும் பனி போர்வை போர்த்தியது போல பனிப்பொழிவு இருந்தது இந்த பனிப்பொழிவு காலையில் பல மணி நேரம் நீடித்தது செடிகள் புல்வெளிகளில் பனித்துளிகள் படர்ந்து காணப்பட்டது பல மணி நேரம் நீடித்த பனிபொழிவு குளிரும் நிலவியது மழைக்காலத்தில் இப்படி கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது என பொதுமக்கள் கூறுகின்றனர்.







